ஒரு விவசாயியிடம் இருந்து வெவ்வேறு இடங்களில் நெல் கொள்முதல் உண்மை தன்மையை கண்டறிய 8 குழுக்கள் அமைத்து கலெக்டர் உத்தரவு

ஒரு விவசாயியிடம் இருந்து வெவ்வேறு இடங்களில் நெல் கொள்முதல் உண்மை தன்மையை கண்டறிய 8 குழுக்கள் அமைத்து கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Feb 2022 7:41 PM IST (Updated: 12 Feb 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு விவசாயியிடம் இருந்து வெவ்வெறு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உண்மை தன்மையினை கண்டறிய 8 குழுக்கள் அமைத்து கலெக்டர் கயாத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்:-

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது மாவட்டம் முழுவதும் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்முதலில் ஒரே விவசாயியிடம் இருந்து 2, 3 முறைகள் வெவ்வேறு இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக உண்மை தன்மையினை கண்டறிய வட்ட அளவிலான வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை கொண்ட 8 குழுக்கள் மாவட்டம் முழுவதும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

கடும் நடவடிக்கை

கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளோ, வியாபாரிகளோ தவறான நோக்கத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story