நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள்
நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் நல உரிமை சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மன்னார்குடி:-
நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் நல உரிமை சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்க கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ராஜ்பாலன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்க கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்து இருப்பதற்கு நன்றி தெரிவிப்பது. இந்த அறிவிப்பினை மீறி நெல்கொள்முதலுக்கு விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டால் மீண்டும் போராட்டம் அறிவிப்பது. மழையால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
அறிக்கை
ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்யாமல் இருப்பதை தடுக்க வேண்டும். அரசு அறிவிப்புகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் அமல்படுத்தப்படுகின்றனவா? என்பதை கண்காணித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கோட்டூர் ஒன்றிய தலைவர் செல்வம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story