வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி


வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 12 Feb 2022 7:52 PM IST (Updated: 12 Feb 2022 7:52 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி நகராட்சிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆய்வு செய்தார்.

மன்னார்குடி:-

மன்னார்குடி நகராட்சிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆய்வு செய்தார். 

142 பேர் போட்டி

மன்னார்குடி நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. நகராட்சியில் உள்ள 33 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 142 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 64 ஆயிரத்து 417 வாக்காளர்கள் வாக்களிக்க 62 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னுகிருஷ்ணன் தலைமையில் 240 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

சின்னம்- பெயர்

வாக்குப்பதிவிற்காக 67 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் கூடுதலாக, 14 வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 
இதனை தேர்தல் கண்காணிப்பாளரான துணை கலெக்டர் கயல்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னு கிருஷ்ணன் மற்றும் அனைத்துக்கட்சி வேட்பாளர்கள் உடன் இருந்தனர். வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணியினை பெல் நிறுவன பொறியாளர்கள் சரத்பாபு, ராஜேஷ் ஆகியோர் மேற்கொண்டனர்.

Next Story