தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை
தொண்டியில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை நடந்தது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெறுவதை யொட்டி துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா, அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் இரவு-பகலாக பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தேர்தல் நடைமுறை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்கு சேகரிக்க வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக 3 நபர்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் அதனை மீறி கூட்டமாக செல்கின்றனரா, தலைவர் களின் பதாகைகளை, கொடிகளை கையிலேந்தி செல் கிறார்களா, ஒலிபெருக்கி மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப் படுகிறதா முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா, போஸ் டர்கள், பேனர்கள் வைக்க படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வீடியோ காட்சியாக பதிவு செய்து வருகின் றனர். மேலும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கும் பறக்கும் படையினர் தேர்தல் நாள் நெருங்குவதால் அதிரடியாக வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story