குடிபோதையில் மில்லுக்கு தீ வைத்த 2 பேர் கைது


குடிபோதையில் மில்லுக்கு தீ வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 9:16 PM IST (Updated: 12 Feb 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே குடிபோதையில் தென்னை நார் மில்லுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் சரவணன் ராஜ் (வயது 45). இவர் சொந்தமாக தென்னை நார் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த தென்னை நார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன்ராஜ் இதுகுறித்து பொள்ளாச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் பொள்ளாச்சி தீயணைப்பு அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த காந்தி (42) மற்றும் மல்லீஸ்வரன் (30) ஆகியோர் குடிபோதையில் சரவணன்ராஜ் மில் அருகே நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதேபோல அவர்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை சரவணன்ராஜ் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காந்தி, மல்லீஸ்வரன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சரவணன்ராஜ் மில்லில் உள்ள தென்னை நார் பண்டலுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தென்னை நார் மில்லிக்கு தீ வைத்த காந்தி, மல்லீஸ்வரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story