கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை சூழ்ந்த மழைநீர்
கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்தது
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் அருகே வடகோவனூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு வடகோவனூர், குடிதாங்கிச்சேரி, லெட்சுமாங்குடி, தெற்குப்படுகை, பாண்டுகுடி, சித்தாம்பூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வடகோவனூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நீரில் நனைந்து சேதம் அடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘13 ஆண்டுகளாக வடகோவனூரில் நெல் கொள்முதல் நிலையம் திறந்த வெளியில் செயல்படுகிறது. இங்கு உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்வது கிடையாது.
கொள்முதல் செய்வதற்கு தாமதம் ஆனதால், தற்போது நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடைவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story