போலீஸ் கொடி அணிவகுப்பு
திருப்புவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
கொடி அணிவகுப்பு
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்கு அளிக்க ஏதுவாக நேற்று மாலை போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்புவனம் சந்தை திடலில் இருந்து ஆரம்பித்த போலீஸ் கொடி அணிவகுப்பு மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்புவனம் புதூர் பஸ் நிறுத்தம் வரை சென்று முடிவு பெற்றது.
ஊர்வலம்
முன்னதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் இசைக்குழுவினர் டிரம்செட் வாசித்தபடி சென்றனர். அதன்பின்னால் போலீஸ் அதிவிரைவு படை மற்றும் போலீசார் ஊர்வலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்கள். தொடர்ந்து வஜ்ரா வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
Related Tags :
Next Story