மின்சார ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் மின்சார ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தமிழ்நாடு மின்சார ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாராம் வரவேற்றார். செயலாளர் சுடலை, பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத்தலைவர் முத்தையா, தூத்துக்குடி கிளை செயலாளர் ஐசக், நெல்லை கிளை தலைவர் கெங்காதரன், கிளைச் செயலாளர் சிவசுப்பு பாண்டியன், சிவகாசி கிளை செயலாளர் துரைப்பாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து, நிரந்தர தொழிலாளியாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு, ஒப்பந்தப்பணி காலத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.80 பிடித்தம் செய்யப்பட்டு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கடந்த ஜூலை முதல் ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து ரூ.150 பிடித்தம் செய்யப்படுவதால், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இணைச் செயலாளர் முத்தையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story