மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க தயாராகும் அறைகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அறைகள் தயாராகி வருகின்றன.
காரைக்குடி,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அறைகள் தயாராகி வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற்று 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின் றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சியில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் மொத்தம் 117 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோல் இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப் பத்தூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள பேரூராட்சி தேர்தலில் மொத்தம் 168 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதையடுத்து வாக்கு பதிவிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிந்து காரைக்குடி நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல் ஆகிய 4 பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மெயின் பிளாக் முதல் தளத்தில் நடைபெற உள்ளது.
இதில் தெற்கு பகுதியில் காரைக்குடி நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கையும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள அறையில் கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக் கையும் நடைபெற உள்ளது. இதையடுத்து தற்போது இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மின்னணு எந்திரங்கள்
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் இருக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க அறைகள் தயாராகி வருகின்றன. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசையாக வைக்கும் வகையில் தரையில் பெயிண்ட் அடித்து கட்டம் வரைந்து அதில் நம்பர் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகம் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியும் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் மெயின் நுழைவு வாயில் பகுதி வழியாக பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லவும், மற்றொரு நுழைவு வாயில் வழியாக காரைக்குடி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன.
முன்னேற்பாடு
இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சி, சிங்கம்புணரி, நெற்குப்பை ஆகிய இடங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அங்கும் தற்போது முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட பகுதியில் பதிவாகும் வாக்குகள் சிவகங்கை அரசு பெண்கள் கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற உள்ளது. அங்கும் முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story