விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தை மாத கடைசி சனிக்கிழமையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், நெய், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல உம்பளச்சேரியில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் உள்ள வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
Related Tags :
Next Story