மனைவி, மாமியாரை தாக்கியவர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 Feb 2022 10:39 PM IST (Updated: 12 Feb 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

மனைவி, மாமியாரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தோகைமலை
தோகைமலை அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி காக்காயம்பட்டி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி(வயது 37). மாரிமுத்துவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட சரஸ்வதி  அருகில் உள்ள தனது தாய் அஞ்சுமணி வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில்  நேற்று முன்தினம் அங்கு சென்ற மாரிமுத்து, தனது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story