நாற்கரசாலை மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
கயத்தாறில் நாற்கர சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
கயத்தாறு:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரம் கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மகன் கண்ணன் (வயது 29). இவர் சென்னையில் பேக்கரி ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கோவில்பட்டியில் உள்ள உறவினரின் துக்க வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் இரவில் தனது ஊரைச் சேர்ந்த நண்பரான மாரியப்பன் மகன் பாண்டிதங்கத்துடன் (23) மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கயத்தாறு- தேவர்குளம் ரோடு நாற்கரசாலை மேம்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பாண்டி தங்கத்தை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story