பாலக்கோட்டில் சரக்கு வேன் மோதி சிறுவன் பலி
பாலக்கோட்டில் சரக்கு வேன் மோதி சிறுவன் பலியானான்.
பாலக்கோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியை சேர்ந்தவர் இம்ரான். இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் ஷேக்அமானு (வயது10). சிறுவன் தந்தையை பார்க்க பாலக்கோட்டுக்கு வந்தான். அப்ேபாது அங்குள்ள ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story