காவேரிப்பட்டணம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல்


காவேரிப்பட்டணம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Feb 2022 10:50 PM IST (Updated: 12 Feb 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி  பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரியவந்தது. காரில் வந்தவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அவர் தர்மபுரி மாவட்டம் எலுமிச்சங்கிரியை சேர்ந்த சிவக்குமார் என்பதும், மாங்காய் வியாபாரத்திற்காக விவசாயிகளுக்கு முன்பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதும் தெரிந்தது.
ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை காவேரிப்பட்டணம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.

Next Story