லாரி மோதி முருக பக்தர் பலி
எட்டயபுரம் அருகே லாரி மோதி முருக பக்தர் பலியானார்.
எட்டயபுரம்:
விருதுநகர் குன்னுர்சந்தை கிழக்கு தெருவை சேர்ந்த ராமர் மகன் அஞ்சப்பன் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரலட்சுமி. இவர்களுக்கு சண்முகப்ரியா (12), ஆனந்தகுமார் (8) என இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் குன்னுர் சந்தையில் இருந்து சுமார் 150 பேர் ஒரு குழுவாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்தனர்.
நேற்று எட்டயபுரம் முத்துலாபுரம் அருகே நடந்து வந்தபோது பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி, பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது. இதில் அஞ்சப்பன், குன்னுர்சந்தை கிழக்கு தெருவை சேர்ந்த வீரன் மகன் முனீஸ்வரன் (23) ஆகியோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அஞ்சப்பன் உயிரிழந்தார். முனீஸ்வரன் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கவி (24) என்பவரிடம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story