நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
வேதாரண்யம்:
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
பேட்டி
வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க வேண்டும்
மேலும் இப்பகுதியில் உள்ள உப்பளங்கள் மழையால் இந்த ஆண்டு மூன்று முறை பாதிக்கப்பட்டுள்ளதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களும், உப்பு உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு விவசாயிகளுக்கும், உப்பள தொழிலாளர்களும் அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து விட்டன. இதனை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story