வாக்காளர்களுக்கு டிபன் கேரியர் கொடுத்தவர் மீது வழக்கு
திருச்செந்தூரில் வாக்காளர்களுக்கு டிபன் கேரியர் கொடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் சுயேச்சைகள் 2 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குமாரபுரம் அம்மன் கோவில் தெருவில் வாக்கு கேட்டு வாக்காளர்களுக்கு டிபன் கேரியர் கொடுக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு தாசில்தார் தில்லைபாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது வீடு வீடாக வினியோகம் செய்த டிபன் கேரியர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 28 டிபன் கேரியர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 52) என்பவர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story