பேக்கரி கடையை சேதப்படுத்திய வாலிபர் கைது


பேக்கரி கடையை சேதப்படுத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2022 11:05 PM IST (Updated: 12 Feb 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூண்டியில் பேக்கரி கடையை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி:
திருப்பூண்டி கடைத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவருடைய மகன் அப்துல் வாஹித் (வயது 25).இவர் திருப்பூண்டி கடைத்தெருவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவில் வந்த 4 பேரில் ஒருவர் அந்த கடையில் கேக் வாங்கியுள்ளார். கேக் விலையை குறைத்து கேட்டதால் அப்துல் வாஹித்துக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் திடீரென கடையில் உள்ள தராசை கீழே போட்டு உடைத்துள்ளார். பின்னர் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அப்துல்வாஹித் கொடுத்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பேக்கரி கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தியது திருப்பூண்டி காரைநகர் பெரியாச்சி கோவில் தெருவை சேர்ந்த ராஜாஜி மகன் சாம்ராஜ் (26) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story