கண்டாச்சிபுரத்தில் செல்போன் டவரில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல்
கண்டாச்சிபுரத்தில் செல்போன் டவரில் ஏறி ஆட்டோ டிரைவர் தற்கொலை மிரட்டல்
திருக்கோவிலூர்
கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் செந்தில்குமார்(வயது 35). ஆட்டோ டிரைவரான இவர் கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி தொழில் செய்து வருகிறார். ஆனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அங்கே ஆட்டோவை நிறுத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் கண்டாச்சிபுரம் கடைவீதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தனது ஆட்டோவை பஸ் நிறுத்தம் அருகில் நிரந்தரமாக நிறுத்தி தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும், ஆனால் இதை போலீசார் தடுத்து தனது வாழ்வாதாரத்தை சீர் குலைப்பதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீசார் செந்தில்குமாரிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கினர். இந்த சம்பவம் கண்டாச்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Related Tags :
Next Story