சிவசேனா கட்சி பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
நாகையில் தனியார் பஸ்சை கடத்தியதாக சிவசேனா கட்சி பிரமுகர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிப்பாளையம்:
திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் மடத்துத்தெரு புதுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது25).இவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணி புரிந்து வருபவர் கீழையூர் ஆனந்த நகரை சேர்ந்த சுரேஷ். கடந்த 4-ந் தேதி பட்டுக்கோட்டையில் இருந்து நாகைக்கு தனியார் பஸ்சை விக்னேஸ்வரன் ஓட்டி வந்தார். நாகை புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்த முயன்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் விக்னேஸ்வரன் மற்றும் சுரேசை மிரட்டி பஸ்சை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஸ்வரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாகை சாலமன்தோட்டம் பகுதியில் வசிக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்த சுந்தரவடிவேல் மற்றும் அவரது நண்பர் பிரதீப், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த விஜயகுமார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story