நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 6 மாணவர்கள் சேர்ந்தனர்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 மாணவர்கள் சேர்ந்தனர்.
நாமக்கல்:
புதிய மருத்துவக்கல்லூரி
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகளில் நாமக்கல் கல்லூரியும் ஒன்றாகும். இந்த கல்லூரியில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் 100 இடங்களை ஒதுக்கீடு செய்தது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. சமீபத்தில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் அவர்களுக்கு மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
6 பேர் சேர்ந்தனர்
இதில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியை அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 பேர் தேர்வு செய்து உள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் 6 பேரும், விளையாட்டு ஒதுக்கீட்டில் ஒருவரும், பொதுப்பிரிவில் 75 பேரும் தேர்வு செய்து உள்ளனர். இவர்களில் தற்போது 6 பேர் நியமன கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி சேர்க்கை பெற்று விட்டனர். மீதமுள்ள 91 பேர் நாளை (திங்கட்கிழமை) முதல் சேர்க்கைக்கான கடிதத்தையும், கல்வி சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க உள்ளனர். மீதமுள்ள 3 இடங்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீடாகும். வருகிற நாட்களில் அவையும் நிரப்பப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story