போலி பட்டா பெற்று கட்டிய வீடுகளை அகற்றக்கோரி சாலை மறியல்
நாட்டறம்பள்ளி அருகே போலி பட்டா பெற்று கட்டிய வீடுகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே போலி பட்டா பெற்று கட்டிய வீடுகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலி பட்டா
நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரபள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 76 ேபருக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
அதற்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் சிலர் போலி பட்டா பெற்று அங்குள்ள காலி மனையில் வீடு கட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலி பட்டா பெற்று வீடு கட்டியவர்களின் வீடுகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தனர்.
சாலை மறியல்
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை திருப்பத்தூர்-நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் பந்தாரபள்ளி பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அரசு அதிகாரிகளிடம் தொலைப்பேசியில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story