960 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது


960 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2022 12:02 AM IST (Updated: 13 Feb 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 960 மதுபாட்டில்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர், பிப்.13-
கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 960 மதுபாட்டில்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
வாகன தணிக்கை
திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று குமார் நகர் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சரக்கு ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
சரக்கு ஆட்டோவில் வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38), திருப்பூர் ஓடக்காட்டை சேர்ந்த மகபூப் பாஷா (55) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். 
960 மதுபாட்டில்கள் பறிமுதல் 
இதில் டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுவை விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. 960 மதுபாட்டில்கள், சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பாக்கியராஜ், மகபூப் பாஷா 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story