மொட்டை மாடியில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மொட்டை மாடியில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2022 12:23 AM IST (Updated: 13 Feb 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

மொட்டை மாடியில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை,

மொட்டை மாடியில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மொட்டை மாடியில் விளையாடினர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 21). இவர் மதுரை அனுப்பானடி கிருஷ்ணன் காலனி 4-வது தெருவில் உள்ள  உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். 
அப்போது வீட்டின் மொட்டை மாடியில் வசந்தகுமார், அனுப்பானடியை சேர்ந்த சுரேஷ்குமார் (16), சிவகுமார் (18) ஆகியோர் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். 

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

அப்போது எதிர்பாராத விதமாக மின்வயரில் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்த சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story