வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 Feb 2022 12:25 AM IST (Updated: 13 Feb 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள சேவகன்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 29). இவர் மீது மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் இவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா ஆகியோர் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று ஆறுமுகநயினாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆறுமுகநயினாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் பிரேமா பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


Next Story