வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி


வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 13 Feb 2022 12:48 AM IST (Updated: 13 Feb 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதையடுத்து அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

பொறையாறு:
தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதையடுத்து அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
சின்னம் பொருத்தும் பணி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்த 18 வார்டுகள் உள்ளன. தரங்கம்பாடியில் உள்ள 3, 4, 5-வது வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் தி.மு.க.-1, அ.தி.மு.க.-2 ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 15 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சைகள் என 61 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து நேற்று மாலை தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வேட்பாளர்கள் முன்னிலையில் 18 மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் (இ.வி.எம்.மிஷின்) வேட்பாளர்கள் பெயருடன் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
அறையை பூட்டி சீல் வைப்பு
பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்கான கன்ரோல் யூனிட் மிஷின் ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டது. பிறகு தனி அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெட்டியில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அறையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். 
அப்போது தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன், உதவி தேர்தல் அலுவலர்கள் மங்களேஸ்வரி, சவுந்தரவல்லி, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, இளநிலை உதவியாளர் மதியரசன், வரித்தண்டலர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story