மேற்பனைக்காடு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்-விவசாயிகள் கவலை


மேற்பனைக்காடு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்-விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 13 Feb 2022 12:55 AM IST (Updated: 13 Feb 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

மேற்பனைக்காடு கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கீரமங்கலம், 
நெல் கொள்முதல் நிலையம்
கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோவில் வளாகத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவிரி பாசனப்பகுதியில் உள்ள மேற்பனைக்காடு, வேம்பங்குடி உள்ளிட்ட கிராமங்களில் விளையும் நெல்லை விவசாயிகள் கொண்டு வந்து மண் தரையில் குவித்து வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்க இடமில்லாததால் விவசாயிகளின் வீடுகளிலும், வயல்களிலும் வைத்துள்ளனர்.
மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்
இந்த நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் நனைந்து ஈரமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பா சாகுபடிக்காக வங்கிகளில் கடன் வாங்கி நெல் பயிரிட்டோம். தற்போது அறுவடை செய்து நெல்மணிகளை கொள்முதல் நிலையம் கொண்டு வந்தால் இங்கே அதற்கான ஊழியர்கள் இல்லாததால் பல நாட்களாக பல ஆயிரம் நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன.
தற்போது மழை பெய்வதால் மண் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நனைந்து வீணாகி விட்டன. 10 நாட்களுக்கு முன்பு கொள்முதல் செய்த பணமும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
கொள்முதல் செய்ய கோரிக்கை
கொள்முதல் தாமதமாவதால் பல நூறு ஏக்கர் நெல் அறுவடை செய்யாமலேயே வயல்களில் கிடந்து நாசமாகிறது. அதனால் அனைத்து நெல் கொள்முதல் நிலையத்திற்கும் உடனடியாக பணியாளர்களை நியமித்து நெல் வீணாகாமல் கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story