பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்


பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Feb 2022 1:12 AM IST (Updated: 13 Feb 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பஸ்-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆதனக்கோட்டை, 
தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை சுந்தரம் (வயது 37) என்பவர் ஓட்டி சென்றார். இதேபோல் கும்பகோணத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவர் காரைக்குடியில் இருந்து கும்பகோணத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் ராதாகிருஷ்ணன் (69), நந்தினி (31) ஆகியோர் இருந்தனர். 
இந்தநிலையில், தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருங்களூர் வாராப்பூர் பிரிவு சாலையோரம் சென்ற போது அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி, நந்தினி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story