கொங்கன்குளம் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
ஆலங்குளம் அருகே கொங்கன்குளம் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு மேற்ெகாண்டார்.
ஆலங்குளம்,
கொங்கன்குளம் கிராமத்தில் கழிவுநீர் மேலாண்மை அமைப்பது பற்றி அதிகாரிகளுடனும், பொதுமக்க ளுடனும் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து ஆலோசித்து ஆய்வு செய்தார். கிராமத்தில் உள்ள குறைபாடுகள் உள்ளனவா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். கொங்கன் குளம் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும் என பொதுமக்கள் கேட்டனர். மக்கிய குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை தொட்டியில் போடவேண்டும் எனவும், கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் எனவும் கலெக்டர் வலியுறுத்தினார். இதில் திட்ட இயக்குனர் திலகவதி, வெம்பக்கோட்டை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சத்தியமூர்த்தி, செல்வராஜ், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி உடனிருந்தனர்.
Related Tags :
Next Story