பெண் பிள்ளைகளுக்கு தாய்மார்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-மதுரை சரக டி.ஐ.ஜி. பேச்சு
சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பெண் பிள்ளைகளுக்கு தாய்மார்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி பேசினாா்.
மேலூர்,
சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பெண் பிள்ளைகளுக்கு தாய்மார்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி பேசினாா்.
விழிப்புணா்வு நிகழ்ச்சி
மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மேலூர் தும்பைபட்டியில் உள்ள கக்கன் நினைவு மண்டபத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி தலைமை தாங்கி பேசியதாவது:-
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, வாரந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
14 வயதில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்வதை மனம் ஏற்க மறுக்கின்றது. இதனை தடுக்க சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை, தாய்மார்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் அதிக அளவு ஆர்வத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவா் பேசினாா்.
உறுதிமொழி
முன்னதாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இலவச எண்களான 1098 மற்றும் வரதட்சணை கொடுமை, பாலியல் தொந்தரவு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி, மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் பாண்டியராஜா, சண்முகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிச்சை, முத்துக்குமார், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசின்னகருப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story