தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 Feb 2022 1:44 AM IST (Updated: 13 Feb 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அணை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை தாலுகா எட்டாகபட்டி ஊராட்சி எதிர்கோட்டை கிராமத்தில் விவசாயிகள் பாசனம், குடிநீர் வசதிக்காக அணை உள்ளது. இந்த அணை பல நாட்களாக சீரமைக்கப்படாமல் கருவேலமரங்கள் ஆக்கிரமித்து மதகுகள் உடைந்து உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நீர்பாசன வசதியின்றி சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அணையை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்றி சீரமைக்க  வேண்டும்.
பாண்டியன், எட்டாகபட்டி.
ஊருணி தூர்வாரப்படுமா?
சிவகங்கை மாவட்டம்  கல்லல் யூனியன் பனங்குடி ஊராட்சி செட்டிதம்மம் பகுதியில் உள்ள ஊருணியில் நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊருணியை தூர்வார வேண்டும்.
ரவீந்திரன், பணகுடி.
எரியாத தெருவிளக்குகள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பூமிநாதர் கோவில் தெருவில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் இரவுநேரத்தில் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  எரியாத தெருவிளக்குகளை அகற்றி புதிய விளக்குகள் அமைக்க வேண்டும். 
ஸ்ரீதர், திருச்சுழி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றது. பகலில் கூட்டமாக சேர்ந்து சாலைகளில் சுற்றுகிறது. இரவில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?
அஸ்வின் குமார், காரைக்குடி.
சேதமடைந்த சாலை 
மதுரை சோலைமலை முருகன் கோவில், கள்ளழகர் கோவிலுக்கு பண்டிகை நாட்கள், முக்கிய நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இந்நிலையில் இந்த கோவிலுக்கு செல்லும் நத்தம் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் சீரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சந்திரசேகரன், மதுரை.
தேங்கிய கழிவுநீர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ெதாற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.
சுப்பு, காரைக்குடி.

Next Story