மாநில ஆக்கி போட்டி:சென்னை வருமானவரி அணி சாம்பியன்
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணி சாம்பியன் பட்டம் வென்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.
திருப்பரங்குன்றம்,
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணி சாம்பியன் பட்டம் வென்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.
மாநில ஆக்கி போட்டி
மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்காவில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில் மறைந்த ஆக்கி வீரர்களான பாலசுப்பிரமணியன், ஜெயசிங், பழனியாண்டவர், மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு 23-வது ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவில்பட்டி, விருதுநகர், சங்ககிரிவாடிப்பட்டி, மதுரை திருநகர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 27 அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடினர்.
அரை இறுதிப் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், மத்திய சுங்க வரித்துறை அணியும் நேரடியாக மோதியது.அதில் 1-0 கோல் கணக்கில் சென்னைஇந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதியானது.
இதேபோல சென்னை வருமான வரித்துறை அணியும், கோவில்பட்டி எக்சலன்சி அணியும் மோதியதில் 1-0 என்ற கோல் கணக்கில் வருமானவரித்துறை அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதியானது.
வருமானவரி துறை அணி சாம்பியன்
இந்த நிலையில் நேற்று மாலையில ்சென்னை வருமான வரித்துறை அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் நேரடியாக களம் இறங்கி மோதியது.அதில் டை பிரேக்கர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை வென்றது. சென்னைஇந்தியன் வங்கி அணி 2-ம்இடத்தையும், மத்திய சுங்க வரித்துறை அணி மூன்றாம் இடத்தையும், கோவில்பட்டி எக்சலன்சி அணி 4-வது இடத்தையும்பெற்றது.
போட்டியில் சிறந்த கோல் கீப்பராக திருநகர்ஆக்கி கிளப் வீரர் கிஷோர், சிறந்த ஆட்டக்காரர்களாக இந்தியன் வங்கி அணி வீரர்கள் ஹரிஷ், சத்தியகுரு, வருமான வரித்துறை அணிவீரர் ஜோஸ்வா, சுங்கவரித்துறை அணி வீரர் செல்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு வழங்குதல்
விளையாட்டு போட்டியினை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆக்கி கிளப் சங்கசெயலாளர் திருநகர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சுங்க வரித்துறை கூடுதல் ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் திருநகர் ஆக்கி கிளப் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story