அரசு மருத்துவமனை எதிரே இறந்து கிடந்த 2 முதியவர்கள்
அரசு மருத்துவமனை எதிரே 2 முதியவர்கள் இறந்து கிடந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க 2 முதியவர்கள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்த முதியவர்களில் ஒருவர் குரும்பலூர் புதுக்காலனியில் வசித்து வந்த சந்திரசேகர்(வயது 60) என்பதும், அவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் என்பதும் தெரியவந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவக்கப்பட்டது. மற்றொருவர் யார்? என்பது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story