வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’


வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 Feb 2022 1:51 AM IST (Updated: 13 Feb 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் ேதர்தல் நடத்தும் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் பயன்படுத்தப்பட உள்ள 38 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தப்பட உள்ள வேட்பாளரின் பெயர், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகள் மற்றும் தபால் வாக்குச்சீட்டுகள் ஆகியவை நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவை இருந்த ெபட்டி, ஜெயங்கொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் சுபாஷினி மற்றும் அரசியல் கட்சியினர், அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, பின்னர் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெட்டி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறையையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலகப் பணியாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story