பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
ஆசிரியர் கைது
பெரம்பலூர் அருகே ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியர் சின்னதுரை (வயது 42), நேற்று முன்தினம் மதியம் குடிபோதையில் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சின்னதுரையை பிடித்து பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சின்னதுரையை கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சின்னதுரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் துறை ரீதியான நடவடிக்கையாக ஆசிரியர் சின்னதுரையை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story