நெல்லையில் மழை


நெல்லையில் மழை
x
தினத்தந்தி 13 Feb 2022 2:02 AM IST (Updated: 13 Feb 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்லை:
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று அதிகாலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழையான காலை 8 மணி அளவில் பரவலாக பெய்தது. 9.30 மணிவரை பெய்த இந்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நனைந்தபடி சென்றனர். 

நெல்லை மாநகரில் மதியம் 2 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. பொதுமக்கள் பலர் குடைபிடித்தபடி சாலையில் நடந்து சென்றனர்.  மழையால் நெல்லையில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Next Story