நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அதிகாலை மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அதிகாலை மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2-வது நாளாக மழை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு நேரத்தில் மழை இன்றி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அதிகாலை 4 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சாரலும், திடீரென மிதமான மழையும் மாறி மாறி பெய்தது. காலை 7 மணிக்கு பிறகு மழை இன்றி காணப்பட்டது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்த வண்ணம் இருந்தது.
விவசாயிகள் கவலை
தொடர் மழையால் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், வல்லம், பூதலூர், மதுக்கூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.. இந்த மழையால் சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story