வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி


வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 13 Feb 2022 2:25 AM IST (Updated: 13 Feb 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

தென்காசி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 440 வார்டுகளில் 1,840 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கணினி குலுக்கள் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. அந்தந்த பகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முன்னிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. 


Next Story