ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 9,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 9,200 பேருக்கு  கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 Feb 2022 2:30 AM IST (Updated: 13 Feb 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 9 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 9 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிறப்பு முகாம்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 504 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மாணவ-மாணவிகள்
கோவிசீல்டு, கோவோக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதில் மொத்தம் 9 ஆயிரத்து 200 பேர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். இதேபோல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
அவர்களுக்கு கோவோக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 161 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 83 ஆயிரத்து 95 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 40 ஆயிரத்து 598 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டு கொண்டு உள்ளனர்.

Next Story