ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 152 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 152 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Feb 2022 2:33 AM IST (Updated: 13 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 152 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 826 பேருக்கு பரிசோதனை செய்ததில் 154 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 830 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 597 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 696 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 730 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 404 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story