புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு
குப்பைகள் அகற்றப்படுமா
பட்டுக்கோட்டை கடைமடை வாய்க்காலான ராஜா மடம் வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய துணிகள் அடங்கிய குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு சுத்தம் செய்யப்படும்.ஆனால் இந்த ஆண்டு சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் குளம் அருகே செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடைக்கின்றது இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தம் செய்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பட்டுக்கோட்டை
சாலை சீரமைக்கப்படுமா
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சி, பெருங்கரை குடியானத் தெருவில் கடந்த சில வருடங்களாக தார்சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது மழைக்காலங்களில் சேறும் சகதியும் நிறைந்த பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அவலநிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார்சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அம்மாபேட்டை.
Related Tags :
Next Story