களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா நடந்தது.
களக்காடு:
களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதையொட்டி, சுவாமி, அம்பாள் கோவிலில் இருந்து வாகனத்தில் எழுந்தருளி, விழா நடைபெறும் தெப்பக்குளத்துக்கு வந்தனர். அங்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி சுற்றி வந்து காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 2-ம் நாளான நேற்று இரவு களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தெப்ப திருவிழா குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story