ஈரோட்டுக்கு விற்பனைக்கு வந்த கருசுறா மீன்


ஈரோட்டுக்கு விற்பனைக்கு வந்த கருசுறா மீன்
x
தினத்தந்தி 13 Feb 2022 2:12 PM IST (Updated: 13 Feb 2022 2:12 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டுக்கு கருசுறா மீன் விற்பனைக்கு வந்தது.

ஈரோடு
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு ராமேசுவரம், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பாறை, ஊளி, விளாங்கு மீன் போன்ற வகை மீன்கள் வழக்கமாக விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
இந்தநிலையில் நேற்று நாகையில் இருந்து கருசுறா வகை மீன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இந்த ஒரு மீன் 25 கிலோ எடை இருந்தது. அரிய வகை மீனாக இருந்ததால் மீன்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கருசுறா மீனை ஆச்சரியமாக பார்த்துவிட்டு சென்றனர். இந்த மீன் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story