லாரி மோதி பனியன் தொழிலாளி சாவு


லாரி மோதி பனியன் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2022 4:45 PM IST (Updated: 13 Feb 2022 4:45 PM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி பனியன் தொழிலாளி சாவு

அவினாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை வயது 57. இவர் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சின்னதுரை மோட்டார்சைக்கிளில் பூலுவப்பட்டி 4 ரோடு சந்திப்பில் இருந்து நெருப்பெரிச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சின்னதுரை ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னதுரை மீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story