பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது


பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 13 Feb 2022 5:25 PM IST (Updated: 13 Feb 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

பலியான 2 பேர் அடையாளம் தெரிந்தது

அவினாசி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள்  மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்கள் யார் என அடையாளம் தெரிந்தது. 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
விபத்து
அவினாசி அருேக  கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு  மோட்டார்சைக்கிளில் வந்த  2 பேர்  சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தனர். 
இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோரித்த மருத்துவர் ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தினர். 
தையல் தொழிலாளிகள்
விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் சென்னிமலைகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகன் சந்திரமூர்த்தி வயது 24 என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள பனியன்நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், மற்ெறாருவர் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் தென்பாதியை அடுத்த நெய்வாசல் மேலதெருவை சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன்.இவர் அவினாசி புதுப்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கீர்த்திராஜா 23 என்பதும் தெரிவந்தது. 
விபத்தில் பலியான சந்திரமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது ஒரு சில நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்ட புதிய மோட்டார்சைக்கிளாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவினாசி அருகே புதிய மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story