கோயம்பேட்டில் பெண் அதிகாரியின் கையை பிடித்து தள்ளிவிட்ட வியாபாரி கைது
கோயம்பேட்டில் பெண் அதிகாரியின் கையை பிடித்து தள்ளிவிட்ட வியாபாரியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் ஏ-ரோடு பகுதியில் கருவேப்பிலை வைத்து வியாபாரம் செய்ய கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு இடம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் கறிவேப்பிலை வியாபாரத்திற்கு ஒதுக்கிய இடத்தை விட்டு சாலையை ஆக்கிரமித்து ஒருவர் கருவேப்பிலையை வைத்து வியாபாரம் செய்து வருவதாக வந்த தகவலையடுத்து, கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு உதவி செயற்பொறியாளர் கல்பனா மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றனர்.
பின்னர், சாலையை ஆக்கிரமித்து கருவேப்பிலை வியாபாரம் செய்த துரை என்பவரிடம் அதனை அகற்றுமாறு கூறினார். ஆனால் அகற்ற மறுத்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கருவேப்பிலையை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த துரை, உதவி செயற்பொறியாளர் கல்பனாவின் கையை பிடித்து தள்ளிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கல்பனா கோயம்பேடு போலீசில் புகார் அளித்ததின்பேரில், கோயம்பேடு போலீசார் துரையை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story