மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்


மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2022 5:29 PM IST (Updated: 13 Feb 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்

மடத்துக்குளத்தில் சில ரெயில்கள் மட்டும்  நின்று செல்கிறது. எக்ஸ்பிரஸ் மற்றும் நீண்ட தொலைவு  செல்லும் ரெயில்கள் நிற்பது இல்லை. தாலுகா தலைநகரான மடத்துக்குளத்திலிருந்து மாநில தலைநகரான சென்னைக்கு தினமும் பல நூறு பேர் சென்று திரும்புகின்றனர். அரசுத்துறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் இதர பணிகளுக்காக செல்பவர்கள் வியாபாரம், அரசியல் கட்சி செயல்பாடுகளுக்காக பயணிப்பவர்கள் என பல தரப்பினர் உள்ளனர். மடத்துக்குளத்தில் ரெயில்கள் நிற்காத காரணத்தால் இவர்கள் அனைவரும் உடுமலை, பழனி சென்று அங்கிருந்து தான் ரெயிலில் பயணிக்கும் நிலமை உள்ளது. இதனால் முதியவர்கள்,பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போதுமடத்துகுளத்தில் முக்கிய ெரயில்கள் நின்று செல்லாததால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினை குறித்து அரசு கவனம் செலுத்தி இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மடத்துக்குளத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்றனர். 

Next Story