குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


குளங்களில் பறவைகள்  கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 13 Feb 2022 5:32 PM IST (Updated: 13 Feb 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

னைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட 19 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டதில், 70 வகையான பறவைகள் கண்டறியப்பட்டது.
பறவைகள் கணக்கெடுப்பு
தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள்நடைபெற்றது. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட என்.மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், திணைக் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம் மற்றும்உப்பார் டேம் ஆகிய 19 இடங்களில், பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
70வகை பறவைகள்
இதில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமையில் வனத்துறை பணியாளர்கள், நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தன்னார்வதொண்டு நிறுவனத்தைச்சேர்ந்த ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் மற்றும் பள்ளி கல்லூரி, மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் ஒவ்வொரு குளத்திற்கும் ஒரு குழு வீதம்19 குழுக்களாகச்சென்று பறவைகளை கணக்கெடுத்தனர்.கணக்கெடுப்பு பணி காலை 6.30 மணி முதல்10.30 மணி வரை நடந்தது.
நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள புதர்களில் இருந்த பறவைகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் என சுமார் 70 வகையான பறவைகள் கண்டறியப்பட்டது. அதில் நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பாம்பு தாரா, நீர் கக்கா, சாம்பல் நாரை, செந்நீல நாரை, ஆற்று ஆலா, நீல தாலை கோழி, நாம கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், கொண்டலாத்தி, நீல வால் கீச்சன், தவிட்டு குருவி,
செம்பருந்து, தேன்பருந்து, செண்பகம், மஞ்சள் வாலட்டி, மைனா, பச்சைக்கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டுக் குருவி, குயில், கவுதாரி, பனைஉழவாரன், வால் காக்கை, புள்ளி ஆந்தை போன்ற பலவிதமான பறவைகள் கணக்கிடப்பட்டன.

Next Story