வாகனம் மோதி உடைந்த மின்கம்பம்
வாகனம் மோதி உடைந்த மின்கம்பம்
ுடிமங்கலம் அருகே கனரக வாகனம் மோதியதில் மின்கம்பம் உடைந்தது. மின்கம்பம் இதுவரை சீரமைக்காததால் அந்த கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்துள்ளனர்.
கனரக வாகனம்
குடிமங்கலம் ஒன்றியத்தில் அனிக்கடவு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட சிந்திலுப்பு கிராமத்தில்100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிந்திலுப்பு கிராமத்தில் இருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையின் குறுக்கே மின் மின்கம்பிகள் செல்கின்றன. சாலையிலே இருபக்கமும் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் குறைவான உயரம் கொண்டவையாக உள்ளன. இந்த கம்பத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
. சம்பவத்தன்று இரவு கனரக வாகனம் சாலையில் செல்லும்போது தாழ்வாக சென்ற மின் கம்பியின் மீது உரசி உள்ளது. இதன் காரணமாக மின் கம்பம் உடைந்து விழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதி
மின் கம்பம் உடைந்து சில நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் கிராம மக்கள் கடந்த சில தினங்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.
சிந்திலுப்பு கிராமத்திலிருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையில் தினமும் அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதன்காரணமாக சாலையின் குறுக்கே அமைக்கப்படும் மின்கம்பங்கள் உயரமாக அமைக்க வேண்டும். புதிதாக மின் கம்பம் அமைத்து குடியிருப்பு பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story