ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு


ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 6:01 PM IST (Updated: 13 Feb 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம், 
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கச்சத்தீவு
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
 அப்போது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற் படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த 2 விசைப்படகு மற்றும் அதில் இருந்த ஆரோக்கியதாஸ், ராஜா, சேவியர், ஜேம்ஸ், ரஞ்சித், முனீஸ்வரன், ராமன், சேகர், முத்தா, ஜெரெமியஸ், பாதாளம், நெப்போலியன் ஆகிய 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தலைமன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வந்தனர். 
தொடர்ந்து அங்கிருந்து அந்த மீனவர்களை இலங்கை கடற்படை முகாம் கொண்டு சென்று தனிமையில் தங்க வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் நேற்று மாலை கிளிநொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த பட்டனர்.
பதற்றம் 
அப்போது 12 மீனவர்களையும் வருகிற 25-ந் தேதி வரை யிலும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர். ராமேசுவரம் மற்றும் தமிழக பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வரும் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

Next Story